தமிழுக்காக தமிழனிடமிருந்து....
உலகின் தலைசிறந்த மொழியையும்
நாகரிகத்தையும் கொண்ட நாம் உலகின் நகரங்களில் எல்லாம் அலைந்துழலும் வாழ்விற்கு
திணிக்கப்பட்டிருந்தோம். எம் நிலத்தில் இருந்து எம்மால் கொண்டுவர முடிந்ததெல்லாம்
எம் தாய் மொழியாகிய தமிழையும் எம் பண்பாட்டுக் கலாச்சாரங்களையும் மட்டுமே!
இவ்வாறு வந்துசேர்ந்த
முதலாம் தலைமுறை மக்களாகிய நாம் எம் வருங்கால சந்ததியினருக்கு மொழியையும்
கலாச்சாரங்களையும் தொடர்ச்சியாகப் பகிரும் நல்நோக்கில்
ஆரம்பிக்கப்பட்டவையே நியூ மோல்டன்
தமிழ் பாடசாலையும் நியூ மோல்டன் நுண் கலையகமும்!
'தேமதுரத் தமிழ் ஓசை
உலகெல்லாம் பரவும் வகை செய்வோம்' என்றான் பாரதி!!! அக்கவிஞனின் பரந்த கனவுக்கு தூய
சிந்தனையுடன் செயல் வடிவம் கொடுக்கும் முயற்சியின் ஒரு சிறு வடிவமே இத்தமிழ்ப்
பாடசாலை.
தமிழ் மொழியை எம் இனத்தின்
அடையாளமாகவும் அதேவேளை இன்றைய நவீன கற்பித்தல் முறைமைக்கு அமைவாக சுவாரசியமான
முறையில் புகட்டுவதே எமக்குள்ள பாரிய கடமை.
அக்கடமையில் துணிந்த மனத்துடனும் நேரிய சிந்தனையுடனும் பணியாற்ற இணைந்திருக்கின்ற
எமக்கு தமிழ்ப்பணியினை செவ்வனே செய்ய உங்கள் வாழ்த்துக்களையும் பங்களிப்புகளையும்
நல்கி எம் தோளொடு தோள் நின்று எம் சிறிய கனவிற்கு பெரிய பக்கபலமாய் விளங்க அனைத்து
நல்லுள்ளங்களையும் பணிவன்புடன் அழைக்கின்றோம்!
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
-மகா கவி
பாரதி
Search! Search for food every day!
Speak! Speak of unwanted things through out!
Worry! Worry myself with thoughts!
Hurt! Hurt others in the way of pointless things!
Get! Get old day by day!
Die! Succumb to vileness, die and finally go without a trace!
I am not them! I am not you!
Don’t you ever dare to think that, I would give up! I never give up!
- Translated by- DhilipSiva